நூலக சேவை
நானாட்டான் பிரதேச சபை நூலகத் துணைவிதிகளை ஆக்கி மற்றும் நியமத்துணை விதிகளை கொண்டு முருங்கனிலும், நானாட்டானிலும், வங்காலைலும் செயற்பட்டு வருகின்றது. அத்துடன் நூலக ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மொத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் ஐந்து வீதத்திற்கும் அதிகமாக செலவு செய்வதற்கு என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபையினால் நிர்வாகிக்கப்படுகின்ற மூன்று நூலகங்களும் மக்களில் அதிக எண்ணிக்கையானோருக்கு சேவைகளை ஆற்றி வருகின்றது அத்துடன் மும்மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ள வெளியீடுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. சகல இன மக்களுக்கும் சேவையைப் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. மேலும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் பொது நடமாடும் நூலக சேவைகளை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பாலர் பாடசாலைகளுக்கு சிறுவர்களுக்கான நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.
அத்துடன் நூலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நூலக அடிப்படை முகாமைத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு மக்களின் முறைப்பாடுகள் எடுக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
அத்துடன் முக்கியமான நூல்களை இவ்வருடம் இலத்திரனியல் நூலகமாகதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.வாசிப்பு மாத நிகழ்வையொட்டி ஒவ்வொரு வருடமும் பல போட்டிநிகழ்ச்சிகள், நடமாடும் நூலகசேவை,நூல்கொள்வனவு, நூல் அன்பளிப்புக்கள், கண்காட்சிகள், கல்வி கருத்தரங்குகள் என்பன இடம்பெற்றன.
நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் உப அலுவலக முருங்கன் பொது நூலகம் 2022 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத போட்டியில் மன்னார் மாவட்டத்தில் வெற்றியீட்டியமைக்கான சான்றிதழ் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


