நானாட்டான் பிரதேச சபை பொது மயானங்கள்
நானாட்டான் பிரதேச சபையைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு இனத்தவருக்கும் தனியான மயானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மயானமும் இடுகாடுகள், சுடுகாடுகள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்தகமானியில் வெளியிடப்பட்டதுடன் மயானங்கள், பிண எரிப்பகங்கள் பற்றிய துணை விதிகள் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.
ஒவ்வொரு மயானத்தினதும் காணி உறுதி மற்றும் நில வரைபடங்கள் பேணப்படுகின்றது. அத்துடன் நல்லடக்கத்திற்கு இடங்களை ஒதுக்கிக்கொடுக்கும் பணிகள், ஒவ்வொரு மயானத்திலும் நல்லடக்கம் செய்யப்படும் பூதவுடல்கள் பற்றிய பதிவேடு தனித்தனியே பேணல், மயானத்தைப் பராமரிக்கும் பணிக்கு சமூகத்தின் பங்களிப்பை பெறல் போன்ற நடவடிக்கைகளை மரண சங்கத்தின் மூலம் சபை நிர்வகிக்கின்றது. அத்துடன் மயானப் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நிர்வகித்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. எமது நிர்வாகப் பிரதேசத்தில் 25ற்கு மேற்பட்ட மயானங்கள் காணப்படுகின்றன.