வாகன சுத்திகரிப்பு நிலையம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில்உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் – Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை – Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட வாகன சுத்திகரிப்பு நிலையம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளுராட்சி மன்றங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் வாகனங்களும் வாகன சுத்திகரிப்பு சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *