நானாட்டான் பிரதேச சபையின் திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்ம கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் LDSP திட்டத்தின் PT2 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட Garbage Collecting Colour Bins எமது ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி மாணவர்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி மேம்படுத்தும் செயற்திட்டம் வங்காலையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்சியாக மன்/டிலாசால் கல்லூரி, நானாட்டான், மன்/சிவராஜா இந்து வித்தியாலயம் – நானாட்டான், மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.