2024 ஆம் ஆண்டு பாதீட்டில் திட்டத்திற்கு அமைய மாற்றுத் திறனாளிகளிற்கு உதவுதல்

2024 ஆம் ஆண்டு பாதீட்டில் மாற்றுத் திறனாளிகளிற்கு உதவுவதற்கென ஒதுக்கப்பட்ட தொகையில், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பகுதியில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தினரினால் நடாத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பயிலும் நிலையத்திற்கு அவர்களது பயன்பாட்டிற்கு ஏதுவான உதவிப் பொருட்கள் 2024.10.29 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மூன்று பொது நூலகங்களின் நூலகர்களும் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள்

இலத்திரனியல் சாதனங்களின் பாவனையில் இருந்து விடுபட்டு வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக பொது நூலகங்களுக்கான அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்குடன் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் பொது நூலகம், நானாட்டான் பொது நூலகம், மற்றும் வங்காலை பொது நூலகம் ஆகிய மூன்று பொது நூலகங்களும் குறித்த இலக்கினை அடைந்தமைக்காக நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மூன்று பொது நூலகங்களின் நூலகர்களும் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.  

நானாட்டான் பிரதேசசபைக்கு சொந்தமான கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைகளினை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன. (25.10.2024 – 08.11.2024)

 

IMG_0001_page-0001

 

திண்ம கழிவு முகாமைத்துவ பயிற்சி செயலமர்வு நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் 22.10.2024 ம் திகதி நடைபெற்றது.

திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்தல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளினை திருமதி.J.M.Antarida. பொறுப்பதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அவர்களினால் நானாட்டான் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 22.10.2024ம் திகதி அன்று நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

   

WhatsApp Image 2024-10-22 at 09.38.25
WhatsApp Image 2024-10-22 at 09.38.27
WhatsApp Image 2024-10-23 at 14.27.52
WhatsApp Image 2024-10-23 at 14.27.53

நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் உப அலுவலகத்திற்கான Solar System பொருத்துவதற்கான கேள்வி அறிவித்தல்

IFB -Solar_page-0001

நானாட்டான் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட குத்தகை கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ( 01.01.2025 – 31.12.2025) கேள்விகள் கோரப்படுகின்றன.

img

 

நிறுவை அளவை உபகரணங்கள் முத்திரையிடல் – 2024 29.10.2024 – செவ்வாய் கிழமை பிரதேச செயலகம் – நானாட்டான்

Tharsan_page-0001
Tharsan 2 (1)_page-0001

 

நானாட்டான் பிரதேச சபையின் வாணி விழா 2024

நானாட்டான் பிரதேச சபையின் வாணி விழா 2024 நானாட்டான் பிரதேச சபையின் ஊழியர் நலன்புரி சங்க அனுசரணையில் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் இனிதே நடைபெற்றது.

இரத்ததான முகாம்

நானாட்டான் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து இரத்ததான முகாம் நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் 30/09/2024 அன்று காலை 9.30 மணியிலிருந்து 2.00 மணி வரை ,அதிகளவான குருதி கொடையாளர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.    

வாகன சுத்திகரிப்பு நிலையம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில்உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட வாகன சுத்திகரிப்பு நிலையம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளுராட்சி மன்றங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் வாகனங்களும் வாகன சுத்திகரிப்பு சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.