திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் உப அலுவலகம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட நானாட்டான் உப அலுவலகம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வங்காலை உப அலுவலகம் மற்றும் வங்காலை பொது நூலகம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட வங்காலை உப அலுவலகம் மற்றும் வங்காலை பொது நூலகம் இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Opening Ceremony Vankalai Sub office & Vankalai Public Library

2024.10.01 - Opening Ceremony - Vankalai- Invitation V2_page-0001

Opening Ceremony of our Nanattan sub office & Solid waste Management center & Vehicle Service station

2024.10.01 - Opening Ceremony - Nanattan - Invitation V2_page-0001

மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கல்

நானாட்டான் பிரதேச சபையினால் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட , மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கும் நிகழ்வானது 25.09.2024ம் திகதி மு.ப 11.00 மணிக்கு மடு; சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024-09-26 at 09.03.49 (1)
WhatsApp Image 2024-09-26 at 09.03.49
WhatsApp Image 2024-09-26 at 09.03.50
WhatsApp Image 2024-09-26 at 09.03.51

 

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்குதல்

நானாட்டான் பிரதேச சபையினால் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட , நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கும் நிகழ்வானது 13.09.2024ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024-09-27 at 12.31.21
WhatsApp Image 2024-09-27 at 12.31.18
WhatsApp Image 2024-09-27 at 12.31.17
WhatsApp Image 2024-09-27 at 12.31.20

 

2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார் அவர்களின், அனுமதிக்கு அமைவாக , நானாட்டான் பிரதேச சபையினால் , நானாட்டான் கோட்டகல்வி அலுவலக எல்லைக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டலுக்கான இலவச முன்னோடி கருத்தரங்கு 2024.08.31 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மதியம் 1.30 மணி வரையில் நானாட்டான் மன்/புனித டிலாசால் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – முருங்கன் – 2024.08.22

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் - முருங்கன் - 2024.08.22
நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு முருங்கன் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை ( முருங்கன் வட்டாரம் ,கற்கிடந்தகுளம் வட்டாரம், மளுவராயன் கட்டையடம்பன் வட்டாரம்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.08.22 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் உப அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நானாட்டான் பிரதேச சபையின் அலுவலர்கள், சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.
IMG-20240822-WA0034
IMG-20240822-WA0040
IMG-20240822-WA0041

வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு (DCB) நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு கிரவல் இட்டு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது