மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – நானாட்டான் – 2024.08.22

 மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் - நானாட்டான் - 2024.08.22
நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நானாட்டான் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை ( நானாட்டான் வட்டாரம் வாழ்க்கைப்பெற்றான்கண்டல் வட்டாரம், இலஹடிப்பிட்டி வட்டாரம்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.08.22 ஆம் திகதி மாலை 2.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் நானாட்டான் உப அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நானாட்டான் பிரதேச சபையின் அலுவலர்கள், சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.
New Project (39)
New Project (36)
New Project (37)

2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தயாரித்தலுக்கான முன் மொழிவுகள் கோரல்

IMG_0001

Invitation for Quotation for Purchasing of Gully Bowser

உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) சிறந்த செயல்திறன் அடிப்படையில் (Performance Tranche - PT3) வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபைக்கு Gully Bowser (Truck mounted Vacuum Gully Bowser - must be Brand New - tank with 4000 liter capacity) கொள்வனவு செய்வதற்கண கேள்வி கோரல்...

Invitation for Quotation for Purchasing of Gully Bowser (Truck mounted Vacuum Gully Bowser - Brand New - tank with 4000 liter capacity) under LDSP - PT3

கேள்வி சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி: Last Date for Submission of Quotation: on or before 2024/09/19 at 10:30 hrs  

LDSP PT3 - 06 - Purchasing of Gully Bowser - IFB

LDSP PT3 - 06 - Purchasing of Gully Bowser - IFB

நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளினை (கடைகள் 08 ) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல் கேள்வி அறிவித்தல் -22.08.2024 – 12.09.2024

நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான, நானாட்டான் சுற்று வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள் 08) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.(22.08.2024 – 12.09.2024)

suttu vattaram_page-0001

 

நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளினை (கடைகள் 08 ) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல்

நானாட்டான் பிரதேச சபைக்குச் சொந்தமான நானாட்டான் சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளினை (கடைகள் 08 ) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பெரிச்சார்கட்டு உள்ளக வீதி செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு (DCB) நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் பெரிச்சார்கட்டு உள்ளக வீதி கிரவல் இட்டு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது    

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – வங்காலை – 2024.08.16

நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வங்காலை உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை ( வங்காலை மற்றும் வங்காலை வடக்கு வட்டாரங்கள்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.08.16 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நானாட்டான் பிரதேச சபையின் அலுவலர்கள், சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.

நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலக புனரமைப்பு வேலைகள் பூரணப் படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி (World Bank) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU - European Union) ஆகிய நிறுவனங்களின் இலங்கைக்கான நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) சிறந்த செயல்திறன் அடிப்படையில் (Performance Tranche) வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலக புனரமைப்பு வேலைகள் பூரணப் படுத்தப்பட்டு பொது மக்களுக்கான சேவைகள் வழங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது

main office side
board

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் 16.08.2024

நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வங்காலை உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ( வங்காலை மற்றும் வங்காலை வடக்கு வட்டாரம்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 16.08.2024 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலகத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள், சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
செயலாளர்
நானாட்டான் பிரதேச சபை

நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடைகளிற்கான கேள்வி அறிவித்தல் -24.07.2024 – 21.08.2024

நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான முருங்கன் பிட்டியில் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள் 02) நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.

Murunkanpitty Shops (2) - Rent IFB (1)