
.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு (2024.06.05)நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் வளி மாசடைதல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சபை நிதி - 2024 ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் 2 வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல் (IFB) 2024.05.09 ஆம் திகதிய தினக்குரல் News பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை
(PSDG) 2023 திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட
வங்காலை 176 வீட்டுத்திட்ட 0.135 KM நீளமுடைய வீதியானது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவ் வீதியானது
ரூபா 4,870,255.47 பெறுமதியில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக தற்போழுது கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) 2023 திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச சபையினால் ரூபா 892,521.15 பெறுமதியான 1000 Liters கொள்ளளவுடைய 13 Water Tanks with Stand கொள்வனவு செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீடுகளில் நாளாந்தம் உருவாகும் உக்காத கழிவான பிளாஸ்டிக் கழிவுகளை வருமானக்குவதற்கு ஓர் அரிய வாய்ப்பு

நானாட்டான் பிரதேச சபையின் பாவனையிலில்லாத பொருட்களின் பகிரங்க ஏல விற்றனை 2024.03.28 ம் திகதி நானாட்டான் பிரதேச சபை பிரதான அலுவலகத்தில் நடைபெறும். .ஆர்வமுள்ள ஏலதாரர்கள் கலந்துகொண்டு ஏலம் கோரமுடியும்.