“சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” நிகழ்வில்மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.

  இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளவில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான நடத்தப்பட்ட போட்டியில் 2022 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டு 04.12.2023 அன்று பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023" நிகழ்வில்மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே சான்றிதழ் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது

நானாட்டான் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தினை மேம்படுத்தல்

நானாட்டான் பிரதேச சபையின் திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்ம கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் LDSP திட்டத்தின் PT2 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட Garbage Collecting Colour Bins எமது ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி மாணவர்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி மேம்படுத்தும் செயற்திட்டம் வங்காலையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்சியாக மன்/டிலாசால் கல்லூரி, நானாட்டான், மன்/சிவராஜா இந்து வித்தியாலயம் - நானாட்டான், மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

சூழலை பசுமையாக்குவோம் செயற்திட்டத்தின் கீழ் துப்பரவு செய்யும் பணியானது வங்காலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

New Project

நானாட்டான் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சூழலை பசுமையாக்குவோம் செயற்திட்டத்தின் கீழ் பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சேகரித்து துப்பரவு செய்யும் பணியானது வங்காலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முருங்கன் உப அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் உணவக உரிமையாளர்களுடன் இடம் பெற்ற கூட்டத்தின் சில பதிவுகள்

நானாட்டான் பிரதேச சபையின் ஏற்பாட்டில் முருங்கன் உப அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் உணவக உரிமையாளர்களுடன் இடம் பெற்ற கூட்டத்தில் உணவு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்குரிய கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2024.01.01 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் திரு. சேவியர் லெம்பேட் ரெனால்ட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2023 இற்கு அமைவாக முதலில் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார், அதனைத்தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் அரச சேவை உறுதியுரையேற்று சத்தியப் பிரமாணம் செய்தனர்.
தற்போதைய சவால்ககள வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அவற்றை அடைவதற்குரிய அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்க உரை ஆற்றப்பட்டது
நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்குரிய கடமை செயற்பாடுகள் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது