நானாட்டான் பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டின் பாதீட்டில் பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான பயிற்சி நெறியானது நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
Category: Service Events
நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையம்
நானாட்டான் பிரதேச சபையின் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மிகவும் குறைந்த விலையில் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும்.
2025.01.01ம் திகதி நானாட்டான் பிரதேச சபையில் கடமையாற்றும் அலுவலர்களின சத்தியப் பிரமாண நிகழ்வும் , பரிசளிப்பும்
2025ம் ஆண்டின் முதல் வேலை நாளான 2025.01.01ம் திகதி நானாட்டான் பிரதேச சபையில் கடமையாற்றும் அலுவலர்களின சத்தியப் பிரமாண நிகழ்வும் , பரிசளிப்பும் நடைபெற்றது.
உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டீன் கீழ் அளிக்கப்பட்ட அனைத்து உப கருத்திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேறியதையிட்டு நானாட்டான் பிரதேச சபை கௌரவத்தினை பெற்றது.
உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டீன் கீழ் நானாட்டான் பிரதேச சபைக்கு அளிக்கப்பட்ட அனைத்து உப கருத்திட்டங்களையும் வரையறுக்கப்பட்ட குறித்த காலப்பகுதிகளின் பௌதீக மற்றும் நிதியியல் ரீதியில் வெற்றிகரமாக நிறைவேறியதையிட்டு மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபை மட்டுமே கௌரவத்தினை பெற்றது.
LDSP நிதி ஒதுக்கீட்டுக்கான செயலாற்றுகை மதிப்பீடு Performance assessment ல் மாவட்ட மட்டத்தில் முதலாவதாகவும் மாகாண மட்டத்தில் மூன்றாவதாகவும் வந்து அதிக நிதியீட்டத்தினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேச சபையின் 2024ம் ஆண்டுக்கான ஒளி விழா
நானாட்டான் பிரதேச சபையின் 2024ம் ஆண்டுக்கான ஒளி விழா 26/12/2024 அன்று நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில், நானாட்டான் பிரதேச சபை ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முதியோர் கௌரவிப்பு விழாவும் ,முதியோருக்கான நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு
நானாட்டான் பிரதேச சபையின் 2024 ம் ஆண்டு பாதீட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவாக 2024 மார்கழி 20ம் திகதி நானாட்டான் பிரதேச சபையினால் நானாட்டான் ஆரோக்கிய மாதா முதியோர் சங்கத்தில் நடைபெற்ற முதியோர் கௌரவிப்பு விழாவும் ,முதியோருக்கான நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வும்.
கணணி மற்றும் இணையம் தொடர்பான பயிற்சி
எமது அலுவலக உத்தியோகத்தர்களுக்கு கணணி மற்றும் இணையம் சம்மந்தமான அறிவை மேம்படுத்தும் பொருட்டு எமது அலுவலக உத்தியோகத்தரான திரு.அ.நித்தியநர்மதன் அவர்களால் 19.12.2024ம் திகதி கணணி மற்றும் இணையம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.
வங்காலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையின் பின்பக்க வீதி புனரமைத்தல்.
வங்காலை கிராமத்தின் புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையின் பின்பக்க வீதி வேலையானது பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு – 2024 நிதியின் கீழ் ரூபா 475,000.00 இற்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் வங்காலை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு நானாட்டான் பிரதேச சபையினால் நிறைவுறுத்தப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை முகாமும், விழிப்புணர்வு கருத்தமர்வும்
நானாட்டான் பிரதேச சபையில் இன்றைய தினம் (11.12.2024) நானாட்டான் பிரதேச சபையின் அலுவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமும், விழிப்புணர்வு கருத்தமர்வும் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி , முருங்கன் வைத்தியசாலை வைத்திய அதிகாரி மற்றும் பற் சுகாதார வைத்திய அதிகாரிகள் , மருத்துவ உத்தியோகத்தர்கள் , பணியாளர்கள் அனைவருக்கும் நானாட்டான் பிரதேச சபை சார்பான நன்றிகள்.
மன்னார் Rotary கழகத்தினால் நானாட்டான் பிரதேச சபை ஊழியர்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
வெள்ளனர்த்தம் காரணமாக ( 23.11.2024 – 28.11.2024 வரையான காலப்பகுதியில்) ஏற்பட்ட இயல்புநிலை பாதிப்பின்போது இரவு பகலாக சேவையாற்றிய நானாட்டான் பிரதேச சபை ஊழியர்களை கௌரவபடுத்தும் முகமாகவும், உதவி செய்யும் முகமாகவும் செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக மன்னார் Rotary கழகத்தினால் நானாட்டான் பிரதேச சபை ஊழியர்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.