BARA AWARDS 2024

2023ம் ஆண்டிற்கான சிறந்த கணக்குகள் மற்றும் அறிக்கையிடலில் நானாட்டான் பிரதேச சபையானது BMICHல் வைத்து 02.12.2024அன்று இலங்கை பட்டயக்கணக்காளா் நிறுவனத்தினா் மற்றும் APFA நிறுவனத்தினரால் CERTIFICATE OF COMPLIANCE உயர் விருதினைப் பெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இவ் விருதினை பெற வழிகாட்டல்களை வழங்கிய செயலாளர் திரு.X.L.றெனால்ட் அவர்கட்கும் , இவ்விருதிற்காக கடந்த ஆண்டு அயராது பணியாற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்வறிக்கையினை திறம்பட உருவாக்கிய எமது உத்தியோகத்தா்களுக்கும் சபையின் சாா்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சீரற்ற காலநிலை காரணமாக எமது சபை எல்லைக்குட்பட்ட பாதிக்கபட்ட மக்கள் எம்முடன் தொடர்பு மேற்கொள்வதன் மூலம் எம்மால் தங்களிற்கு துரித சேவைகள் வழங்க முடியும்..

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக எமது சபை எல்லைக்குட்பட்ட பாதிக்கபட்ட மக்கள் எம்முடன் தொடர்பு மேற்கொள்வதன் மூலம் எம்மால் தங்களிற்கு துரித சேவைகள் வழங்க முடியும்..

பயணங்களிற்கு இடையூறாக வீதியில் விழும் மரங்கள்

வெள்ளம் தடைப்படும் இடங்கள்

போன்ற இடர்களை எமக்கு உடன் அறியத்தாருங்கள் நாம் உங்களுடன் உடன் இணைவோம்.

கீழ் உள்ள புகைப்பட பதிவில் தொடர்பு இலக்கங்கள் குறிப்பிட பட்டுள்ளது.


468299089_553043767587444_8376096407256348721_n

Improvement of Access of Public Play Ground at Issaimalaithalvu

இசைமாலைத்தாழ்வு விளையாட்டு மைதானத்தின் உள்ளக வீதிக்கான Hume Pipe பொருத்துதல் வேலையானது பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு – 2024 நிதியின் கீழ் ரூபா 50,000.00 இற்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் இசைமலைத்தாழ்வு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, நானாட்டான் பிரதேச சபையினால் நிறைவுறுத்தப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரைபு வரவு செலவுத்திட்டம் – பொதுமக்களின் கருத்துக்களை அறிதல்

நானாட்டான் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரைபு வரவு செலவுத்திட்டம் 2024.11.08 ஆம் திகதிய முகாமைத்துவக் குழுக் கூட்டம் மூலம் முன்மொழிவு செய்யப்படுகின்றது. இவ் வரைவு வரவு செலவுத் திட்டம் தொடர்பான கருத்துக்களை 2024.12.02 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு தெரிவிக்க முடியும்.

2024ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வு

2024ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வும் ,பரிசளிப்பும் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் முள்ளி மோட்டை முன்பள்ளியில் 11/11/2024ம் திகதி நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிமோட்டை முன் பள்ளி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேச சபையினால் நடாத்தப்பட்டு வரும் முள்ளிமோட்டை முன் பள்ளிக்காக LDSP நிதி திட்டத்தீன் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடமானது, நானாட்டான் பிரதேச சபை செயலாளரினால் 11/11/2024 ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Construction of Culvert at Achchankulam Village Main Road

அச்சங்குள கிராமத்தின் பிரதான வீதியில் மதகு அமைக்கும் வேலையானது பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு 2024 நிதியின் கீழ் ரூபா 2,50,000.00 இற்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் அச்சங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு நானாட்டான் பிரதேச சபையினால் நிறைவுறுத்தப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பாதீட்டில் திட்டத்திற்கு அமைய மாற்றுத் திறனாளிகளிற்கு உதவுதல்

2024 ஆம் ஆண்டு பாதீட்டில் மாற்றுத் திறனாளிகளிற்கு உதவுவதற்கென ஒதுக்கப்பட்ட தொகையில், நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பகுதியில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தினரினால் நடாத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பயிலும் நிலையத்திற்கு அவர்களது பயன்பாட்டிற்கு ஏதுவான உதவிப் பொருட்கள் 2024.10.29 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மூன்று பொது நூலகங்களின் நூலகர்களும் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள்

இலத்திரனியல் சாதனங்களின் பாவனையில் இருந்து விடுபட்டு வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக பொது நூலகங்களுக்கான அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்குடன் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் பொது நூலகம், நானாட்டான் பொது நூலகம், மற்றும் வங்காலை பொது நூலகம் ஆகிய மூன்று பொது நூலகங்களும் குறித்த இலக்கினை அடைந்தமைக்காக நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மூன்று பொது நூலகங்களின் நூலகர்களும் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.  

திண்ம கழிவு முகாமைத்துவ பயிற்சி செயலமர்வு நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் 22.10.2024 ம் திகதி நடைபெற்றது.

திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்தல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளினை திருமதி.J.M.Antarida. பொறுப்பதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அவர்களினால் நானாட்டான் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 22.10.2024ம் திகதி அன்று நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

   

WhatsApp Image 2024-10-22 at 09.38.25
WhatsApp Image 2024-10-22 at 09.38.27
WhatsApp Image 2024-10-23 at 14.27.52
WhatsApp Image 2024-10-23 at 14.27.53