நானாட்டான் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட குத்தகை கடைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ( 01.01.2025 – 31.12.2025) கேள்விகள் கோரப்படுகின்றன.

img

 

நிறுவை அளவை உபகரணங்கள் முத்திரையிடல் – 2024 29.10.2024 – செவ்வாய் கிழமை பிரதேச செயலகம் – நானாட்டான்

Tharsan_page-0001
Tharsan 2 (1)_page-0001

 

இரத்ததான முகாம்

நானாட்டான் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து இரத்ததான முகாம் நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் 30/09/2024 அன்று காலை 9.30 மணியிலிருந்து 2.00 மணி வரை ,அதிகளவான குருதி கொடையாளர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.    

வாகன சுத்திகரிப்பு நிலையம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில்உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட வாகன சுத்திகரிப்பு நிலையம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளுராட்சி மன்றங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் வாகனங்களும் வாகன சுத்திகரிப்பு சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் உப அலுவலகம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட நானாட்டான் உப அலுவலகம், இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வங்காலை உப அலுவலகம் மற்றும் வங்காலை பொது நூலகம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.(01/10/2024)

பொது மக்கள் பங்கேற்புடனான வட்டார ரீதியான அபிவிருத்தி முன்னுரிமை தெரிவுகள் அடிப்படையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் - Local Development Support Project (LDSP) [World Bank and European Union funded Project] திட்டத்தின் சிறந்த செயலாற்றுகை - Performance Tranche நிதி ஒதுக்கீட்டின் கீழ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சபை நிதி ஒதுக்கீட்டின் கீழும் மேம்படுத்தப்பட்ட வங்காலை உப அலுவலகம் மற்றும் வங்காலை பொது நூலகம் இன்றைய தினம் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கல்

நானாட்டான் பிரதேச சபையினால் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட , மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கும் நிகழ்வானது 25.09.2024ம் திகதி மு.ப 11.00 மணிக்கு மடு; சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024-09-26 at 09.03.49 (1)
WhatsApp Image 2024-09-26 at 09.03.49
WhatsApp Image 2024-09-26 at 09.03.50
WhatsApp Image 2024-09-26 at 09.03.51

 

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்குதல்

நானாட்டான் பிரதேச சபையினால் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட , நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வகை வழங்கும் நிகழ்வானது 13.09.2024ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024-09-27 at 12.31.21
WhatsApp Image 2024-09-27 at 12.31.18
WhatsApp Image 2024-09-27 at 12.31.17
WhatsApp Image 2024-09-27 at 12.31.20

 

வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு (DCB) நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை இரத்தினபுரி 6ஆம் குறுக்கு தெரு கிரவல் இட்டு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது