பெரிச்சார்கட்டு உள்ளக வீதி செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு (DCB) நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேச சபையின் பெரிச்சார்கட்டு உள்ளக வீதி கிரவல் இட்டு செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது    

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – வங்காலை – 2024.08.16

நானாட்டான் பிரதேச சபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வங்காலை உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை ( வங்காலை மற்றும் வங்காலை வடக்கு வட்டாரங்கள்) பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.08.16 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் வங்காலை உப அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நானாட்டான் பிரதேச சபையின் அலுவலர்கள், சமூக மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.

சூரிய மின்கல வீதி விளக்குகள் (Solar Power Street lamp)

உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் (LDSP) செயற்பாட்டு ஒதுக்கம் (PT)- 2 நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கப்பெற்ற நிதியின் ஒருபகுதியில் 3.40 மில்லியன் செலவில் சூரிய மின்கல வீதி விளக்குகள் (Solar Power Street lamp) கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மயானங்களிலும் மின்சார விநியோக வடங்கள் இல்லாத பிரதான வீதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.